பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, March 17, 2015

    மூன்று நாள் செம்மொழிக் கருத்தரங்கம்

  சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியங்களில் தமிழர் பழக்க வழக்கங்கள் - அன்றும் இன்றும் என்னும் தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கின் தொடக்க விழா 25.02.2015 அன்று கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் துறைத்தலைவருமான பேரா .அழகர் வரவேற்புரை வழங்கினார். கருத்தரங்கைத் தலைமை ஏற்று தலைமையுரையைக் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் திரு .எஸ்.அர்ஜூனராஜா வழங்கினார். சங்க கால மக்களின் பண்பாடு நாகரிகம் குறித்த செய்திகளை வழங்கி கல்லூரி ஆட்சிமன்றக் குழுச் செயலர் திரு எஸ்.ஆர்.தனுஷ்கோடிராஜா வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் வே.வெங்கட்ராமன் அவர்களும் துணைமுதல்வர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். தமிழர்களிடம் உள்ள நடைமுறை பழக்க வழக்கங்களும், நம்பிக்கைகளும் பற்றிய தொல்காப்பிய காலம் தொட்டுப் பயன்படுத்தப்படும் பழக்க வழக்கங்கள் குறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பேரா அழகேசன் எடுத்துரைத்தார். கணினித் தமிழில் இன்றைய சமூதாயத்தின் வளர்ச்சி நிலை பற்றியும் நுலைப்பூவில் தகவல்களைத் தொகுக்கும் முறை பற்றியும் செம்மொழித் தமிழாய்வு ஆய்வுத்திட்ட அலுவலர் முனைவர் .எழில்வசந்தன் எடுத்துரைத்தார். நிறைவில் பேரா வி.கலாவதி நன்றியுரை வழங்கினார்.

      கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் பதினோறு தமிழறிஞர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர். ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் .வேலம்மாள் “நற்றிணையில் பழக்க வழக்கங்கள்என்னும் தலைப்பிலும், முனைவர் .அழகர்புறனாநூற்றில் நடுகல் வழிபாடுஎன்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினர். “கையறுநிலைப் பாடல்களும் கைம்மை நோன்பும்என்னும் தலைப்பில் முனைவர் சு.தங்கமாரி உரை நிகழ்த்தினார். முனைவர் .பாரிஜாதம் தலைமையில் நிழ்ந்த அமர்வில் முனைவர் சிவசங்கர் பெரும்பாணாற்றுப்படையில் பழக்க வழக்கங்கள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். பிற்பகல் கருத்தரங்கில் தமிழர் பண்பாட்டு நடவடிக்கை தொடரும் கூறுகள் என்னும் தலைப்பிலும், சங்க இலக்கியத்தில் பாணர்கள் என்னும் தலைப்பில் .பிரசன்னாவும், முனைவர் சு.நயினார் எட்டுத்தொகை அக இலக்கியங்களில் பழக்க வழக்கங்கள் என்னும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.

மூன்று நாள் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பேரா .பழனிச்சாமி வரவேற்றுப் பேசினார். மூன்று நாள் நடைபெற்ற கருத்தரங்கின் குறிப்புரையைக் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும்   துறைத் தலைவருமான  பேரா .அழகர் வழங்கினார்இவ்விழாவிற்கு ஆட்சிமன்றக்  குழுச்  செயலர் திரு எஸ்.ஆர்.தனுஸ்கோடி ராஜா  தலைமையேற்றார். ஆட்சிமன்றக்  குழுத்தலைவர்  திரு .எஸ்.அர்ஜூனராஜா, கல்லூரி  முதல்வர்  திரு வே.வெங்கட்ராமன்துணை  முதல்வர்  எம்.வைத்தியநாதன்  ஆகியோர்  வாழ்த்துரை   வழங்கினர். கருத்தரங்க  நிறைவுரையை  உலகத்  தமிழாராய்ச்சி  நிறுவனப்  பேராசிரியை  முனைவர்  .சுலோச்சனா  வழங்கினார். கருத்தரங்கில்  கலந்துகொண்டோருக்குச்  சான்றிதழ்களும்  பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டனபேரா .கந்தசாமிபாண்டியன்  நன்றி  கூறினார்.