முத்தமிழ் மன்ற துவக்க விழா
அறிமுக உரை
தலைமை உரை
வழக்கறிஞர் க.லட்சுமிநாராயணன் சிறப்புரை
சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள்
கல்லூரி முதுகலைத் தமிழ்த்துறையின் முத்தமிழ் மன்ற துவக்க விழா 01.08.2012 அன்று
கல்லூரி மேற்கு வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் முத்தமிழ் மன்றம்,
சமூக நலப்பணிக் குழு மற்றும் கலை வளர்ச்சிக் மன்றம் ஆகியவற்றின் துவக்க விழா
நிகழ்ந்தது. தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க.சிவனேசன்
தலைமையுரை ஆற்றினார். முனைவர் சு.நயினார்
அறிமுகவுரை நிகழ்த்தினார். இவ்விழாவில் இராசபாளையம்
வழக்கறிஞர் திரு.க.லட்சுமிநாராயணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர்
பேசும் போது உலக முதல் மொழி நம் தமிழ் மொழி. அத்தகைய தொன்மையான மொழி பல்வேறு
இலக்கிய வளங்களைக் கொண்டுள்ளது. இவ்விலக்கியங்கள் மக்களின் இயல்பான எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.
இது நமது தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்று. இவ்விலக்கியங்கள் அனைத்தும் மேலை நாட்டு
இலக்கியங்களை விட மிகவும் உயர்ந்ததாகவும் மானம் மற்றும் வீரத்திற்குச் சான்றாகவும் உள்ளது. இத்தகைய
தொன்மை மிக்கப் பழமை மிக்க மொழியின் பழைய வரலாறுகளைப் பேசிக்கொண்டு மட்டும்
இருந்து விடாமல் அவற்றின் பெருமையினையும் தொன்மையினையும் காப்பாற்றும் பங்கு
தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தான் உண்டு. எனவே, அதனை உணர்ந்து அனைவரும் செயல்பட
வேண்டும். மேலும் தமிழர்களின் எண்ணங்கள் மிகவும் சிறப்பானது. எனவே ஒவ்வொருவரும்
தங்களின் எண்ணங்களை இலக்கியமாக வடிக்க வேண்டும். அப்படி வார்த்தெடுக்கும் போது
தன்னிலை தாளாமல் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். நம்பிக்கை இருந்தாள் எதையும்
சாதிக்கலாம். இதற்குச் சான்று மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்
மற்றும் மறைந்த நகைச்சுவை மாமேதை சார்லி சாப்ளின் என்று கூறி தமிழ் இலக்கியம்
மட்டுமல்லாது உலக இலக்கியங்களைப் பற்றியும் சிறப்பான சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியினை முதுகலைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் து.வெள்ளைச்சாமி மற்றும் சமூக நலப்பணி குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சோ.முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பாகச்
செய்திருந்தனர்.
Super anna kalakunga
ReplyDeleteNalla erukudhu Anna
ReplyDelete