பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Thursday, July 5, 2012

தமிழ்த்தாய் வாழ்த்தில் பாவாணரின் திருத்தம்


ஒருநாட்டிற்கும் ஒரு இனத்திற்கும் மொழியின் பெயரே பெயராய் அமைந்திருக்கும் சிறப்பு நம் இனத்திற்கும் நம் மொழிக்கும் மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு. அதோடு அமையாது நமக்கென தனி மொழி வாழ்த்தும் நமக்கு உண்டு. ஆனால், நம் மொழி வாழ்த்தில் கூட ஆரியம் கலந்திருக்கும் அவலமும் நம் மொழிக்கு மட்டுமே உண்டு. இதனைச் சுட்டிக்காட்டிய பேரும் பெருமையும் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணரையே சாரும். அவர் சுட்டிக் காட்டும் தவற்றை நாமும் தெரிந்து கொள்ளுவோம்.

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் பாடல்

நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ் பரத கண்டமிதில்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும்புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலை யாளமுந்துளுவும்
உன்னுதரத்துதித் தெழுந்தே ஒன்றுபலவாயிடினும்
சதுர்மறை யாரியம் வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழி நீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே


பாவாணரின் திருந்திய பாடல்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் முகமெனவே திகழ் நாவற் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும்
தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழி நற்றிருநாடும்
அத்தகும் பொட்டரு மணம் போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெருந் தமிழணங்கே
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
உன்வயிற்றில் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
சதுர்மறையா ரியம்வருமுன் சாலுலகே நினதாயின்
முதுமொழி நீமுதலிலியா மொழிகுவதும் வியப்பாமே

No comments:

Post a Comment